திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையம் மற்றும் காவல் கட்டுப்பாட்டறை உள்ள சாலை மிக மோசமாக பல மாதங்களாக அதே நிலையில் காட்சியளிக்கிறது. பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் என மாறிமாறி குழியை வெட்டி சாலையில் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஓட்ட முடியாத நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் மிகவும் இருட்டாகவும் இருள் சூழ்ந்து அந்த சாலை இருக்கிறது. பள்ளங்களில் ஜல்லிகளை கொட்டி பல மாதங்களாக வைத்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க காவல் நிலையங்களில் வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சாலை ஓரத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு புதர்களுக்குள் காட்சியளிக்கிறது. திருச்சி மாநகராட்சி நீதிமன்றம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
அதைவிட அந்த சாலையில் காவல்துறையின் (Police club)அதிகாரிகள் ஓய்வெடுக்கும் இல்லமும் உள்ளது. அந்த சாலையும் அதே நிலைதான் மழை பெய்தால் அந்த சாலையில் சேரும் சகதியும் ஆக மாறிவிடுகிறது. இந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மற்றும் வாகன ஓட்டுகளில் வேண்டுகோளாக உள்ளது.
மிக முக்கியமாக அந்த சாலையில் மாநகராட்சி உறுப்பினர் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். அவர் தினமும் இந்த சாலையில் பயணிக்கிறார் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மிக முக்கியமாக அந்த சாலையில் திரும்பும் பொழுது செடிகள் புதர்மன்றி கிடைக்கிறது.
அந்த சாலையில் காவல்நிலைய வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் தெரியாத அளவில் உள்ளது. இத்துப்போன ஆட்டோக்களும் அந்த சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவைகளை அப்புறப்படுத்தினால் விபத்து ஏற்படாமல் அசம்பாவிதம் நிகழாமல் பொதுமக்களை பாதுகாக்க முடியும் என சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உடனடியாக காவல்துறை அந்த வாகனங்களை அப்புறப்படுத்தியும் மாநகராட்சி அந்த சாலையை சீர் செய்து தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments