திருவெறும்பூர் அருகே மாமியாரிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்துஊற்றியதில் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சைக்கு பலனில்லாமல் பறிதாபமாக உயிரிழந்தார்.
திருவெம்பூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் செல்வராஜ் (27) இவர் மாமியார் இன்னாசியம்மாள்(40) வீட்டில்மனைவி டயானா மேரியுடன் (22) வசித்துவந்துள்ளார்.
இந்த நிலையில் செல்வராஜுடு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்வராஜ் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது,
இதனால் மனம் வெறுத்துப் போன டயானா மேரியும், இன்னாசி அம்மாளும் கடந்த 5ம் தேதி செல்வராஜ் மீது சுடு தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து ஊற்றியுள்ளனர்.
இதில் செல்வராஜ உடல் முழுவதும் வெந்து போய் உள்ளது உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்வராஜை காப்பாற்றி திருத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் இன்று காலை பறிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஏற்கனவே திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தயாள மேரியையும் இன்னாசி அம்மாளையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் செல்வராஜ் இறந்துள்ளதால் இந்த வழக்கை திருவெறும்பூர் போலீசார் கொலை வழக்கமாக மாற்றிவிசாரணை செய்து வருகின்றனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments