உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என் நேரு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அந்த சந்திப்பில் ஆறு வழி சாலை நாலு வழி சாலை எப்பொழுது முடிவு வரும்?என்று கேள்விக்கு மத்திய அரசு 6வழி சாலையை பஞ்சபூர் பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட
சாலை (elivated highway, அமைப்பதற்கும், கரூர் சாலையில் இருந்து துவாக்குடி வரை நான்கு வழி சாலை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். விரைவில் நான்கு வழி சாலை பணிகளும் ஆறு வழி சாலை பணிகளும் முடிக்கப்படும். இச்சாலைக்குரிய தமிழ்நாடு அரசின் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டது. இனி மத்திய அரசு பணிகள் மட்டுமே மீதம் உள்ளது. மத்திய அரசு பணிகள் முடிந்தவுடன் இச்சாலை விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
இச்சாலை பயன்பாட்டிற்கு வந்தவுடன் அனைத்து இடங்களுக்கும் விரைவாக செல்ல முடியும் போக்குவரத்து நெரிசலும் குறையும்.அதிகபட்சமாக ஆறு மாதத்திற்குள் இச்சாலை அமைப்பதற்குரிய பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
இப்பணி முடிந்தவுடன் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு அனைத்து பகுதிகளிலும் செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments