இந்திய குடியரசு தலைவர் ஸ்ரீரங்கம் கோவில் இன்று சாமி தரிசனம் செய்தார்
ஜனாதிபதி கோவிலுக்கு உள்ளே வந்தது முதல் இந்த கோவிலைபற்றி கேட்டு விளக்கங்கள் அளித்தபோதும், எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்.
பிரமாண்டமான கோவிலை பார்த்தது கிடையாது சந்தோஷமாக உள்ளது என கூறியதாகவும், எல்லாமே அழியக்கூடியது ஆனால் அழியாது கோவில் மட்டும்தான், அடுத்துவரும் தலைமுறைக்கும் நிரந்தரமாக கொடுத்துவிட்டு சென்றது கோவில்தான் என கூறியதையடுத்து மிகவும் சந்தோஷமடைந்ததுடன், பகவானிடம் நின்று மனம்உருகி பிரார்த்தனைசெய்தார்.
மேலும் ராமானுஜர், நாம் தப்பு செய்தாலும் மாற்றுவழி ஆறுதடவை ஓம் நமோ நாராயணா என்று சொன்னால் நம்முடைய பாவங்கள் மட்டுமன்றி நமது தலைமுறையினரின் பாவங்கள் தீரும் என கூறியதையடுத்து, கண்ணீர்மல்க ஓம்நமோநாராயண என ஆறுமுறைகூறி வழிபாடுசெய்து, இந்தகோவில் நிரந்தரமான சந்தோஷத்தையும், சௌபாக்கியத்தையும் அளிக்கும் என கூறிவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
முதலில் சக்கரத்தாழ்வார்சன்னதி, பெரிய பெருமாள் மற்றும் தாயார் சன்னதி அதனைத் தொடர்ந்து உடையவர் எனப்படும் ராமானுஜர் சன்னதியில் வழிபாடு செய்ததாகவும் தெரிவித்தார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments