Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விரைவில் தமிழக முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்படும் திருச்சியில் விக்கிரமராஜா எச்சரிக்கை

இந்தியாவில் சில்லரை வணிகத்தில் கோடிக்கணக்கான ஏழை மற்றும் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டத்திற்கு மாற்றாக சுயதொழில் என்ற அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சில்லரை வணிகம் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றது. மேலும் சிறு, குறு நடுத்தர வணிகர்களின் வருவாய் ஆதாரமாகவும், வாழ்வாதாரமாகவும் சில்லரை வணிகம் விளங்கி வருகின்றது.
இந்த நிலையில்
அண்மைக்காலமாக அகில இந்திய அளவில் பெருகி வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடி சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகரமான அறிவிப்புகள், ஏராளமான சலுகைகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி சில்லறை வணிகத்தை கபளீகரம் செய்து வருகின்றன. இதனால் சிறு -குறு நடுத்தர வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏராளமானோர் தங்கள் வணிகத்தை இழந்து மாற்று வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் மேற்கண்ட நடவடிக்கைகள் இந்திய சில்லறை வணிகர்களுக்கு எதிரான தீவிரவாதம் என்றே கருத வேண்டியுள்ளது.
இதில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் திருச்சியில் ஏற்கனவே 2 இடங்களில் மிகப்பெரிய அளவில் இயங்கி வருகின்றது. தற்போது இதே திருச்சியில் 3-வது கிளையை 1,50,000 சதுர அடி பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்க ஆயத்தமாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏறதாழ 30 லட்சம் சில்லரை வணிகர்கள் சிற்றூர் முதல் நகரம் வரை பரந்து விரிந்து சுமார் 1 கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய வணிக குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனவே சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம் நடத்துவது என பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று  சனிக்கிழமை திருச்சியில் கார்ப்பரேட் நிறுவனத்தின் 3வது கிளை அமைய உள்ள வயலூர் ரோடு வாஸன் வேலி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் மாபெரும் அடையாள முற்றுகை போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார். மாநில தலைமை நிலைய செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார்.
இந்தப் போராட்டத்தில் மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தலைவருமான கந்தன்,மாநில பொதுச் செயலாளர் அன்பழகன்,மாநில பொருளாளர் அம்பாள் ஸ்ரீ ராம குமார்,மாநிலத் துணைத் தலைவர்கள் . கே.எம். எஸ். ஹக்கீம்,ரங்கநாதன்,மாநில இணைச்செயலாளர்கள்  எம்.கே.கமலக்கண்ணன், ராஜாங்கம்,திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன்,மற்றும்
மாநில கூடுதல் செயலாளர்கள், மண்டல தலைவர்கள், மாநில துணைதலைவர்கள், மாநில இணைசெயலாளர்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தின் கிளைச்சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதுமுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள், இளம் தொழில் முனைவோர் அணியினர், பழைய பொருள் அணியினர் உட்பட மாநிலம் முழுவதிலுமிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு தொழில் சார்ந்த வணிக சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:- “கார்ப்பரேட் கம்பெனிகளின் சில்லரை வணிக ஆதிக்கத்தினால் சிறு,குறு அடித்தட்டு வணிகர்களுக்கு வருவாய் இழப்பு வாழ்வாதார இழப்பு ஏற்பட்டு வருமை நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்கும் விதமாகவும் சில்லரை வணிகத்தை பாதுகாக்கும் விதமாகவும் முதற்கட்டமாக இவ் அடையாள முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. எனவே மத்திய -மாநில அரசுகள் சட்ட விதிகளில் உரிய மாற்றம் செய்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சில்லரை வணிக ஆதிக்கத்தை அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும். உரிய தீர்வு ஏற்படாத பட்சத்தில் டி-மார்ட் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் முற்றுகையிடும் போராட்டம் மிகத் தீவிரமாக விரைவில் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

என்ன செய்யல வேலை சந்தித்த விக்கிரமா ராஜா தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று திரும்பிய பிறகு அவர் நேரில் சந்தித்து சில்லறை வணிகர்களை பாதுகாக்க டி மார்ட் போன்ற நிறுவனங்களை தமிழ்நாட்டில் வரவிடாமல் தடுக்க மீண்டும் பேசி விவாதிக்க உள்ளோம். வால்மாற்று நிறுவனத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மூடியது போல் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் டி மார்ட் நிறுவனங்களை தமிழ்நாட்டில் வரவிடாமல் தடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது மேலும் வருக சட்டமன்றத் தேர்தலில் எங்கள் ஆட்சி மன்ற குழுவை கூட்டி அவர்கள் காட்டும் திசையில் வாக்களிக்க முடிவு செய்வோம் தற்பொழுது ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கிறோம் அது தொடர்பாக மத்திய நிதி அமைச்சரை சந்திக்க உள்ளோம் இந்த வரி விகித மாற்றத்தினால் பொருட்கள் விலை குறையும் என்றார். மேலும் சில்லறை வணிகர்களை பாதுகாக்க எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் பார்த்து ஆதரவு திரட்ட உள்ளோம் விரைவில் தமிழகத்தில் முழுவதும் ஒட்டுமொத்தமாக கடைகளை அடைத்து போராடும் அளவிற்கு அடுத்த கட்ட முடிவு ஆலோசித்து எடுப்போம் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *