திருச்சி, செப்டம்பர் 12: திருச்சி மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 12, 2025) பரவலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8:30 மணி நிலவரப்படி, லால்குடி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

மழை நிலவரம்:
லால்குடி: 26.4 மி.மீ.
மண்ணச்சநல்லூர்: 32.4 மி.மீ.
நந்தியார் ஹெட்: 15 மி.மீ.
புள்ளம்பாடி: 23.2 மி.மீ.
தேவிமங்கலம்: 32.4 மி.மீ.
சமயபுரம்: 15 மி.மீ.

மழை காரணமாக திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இதமான சூழல் நிலவுகிறது. அதேசமயம், மணப்பாறை, மருங்காபுரி, துறையூர் போன்ற சில பகுதிகளில் மழைப் பொழிவு குறைவாக இருந்ததும், சில இடங்களில் மழை இல்லாததும் குறிப்பிடத்தக்கது.

மாவட்டம் முழுவதும் மொத்தமாக 227.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 9.47 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழை விவசாயிகளுக்கு ஓரளவு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments