ஆண்டுதோறும் அக்டோர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை வன உயிரின வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. இயற்கையை பாதுகாக்கவும், விலங்குகள் மற்றும் காடுகளை காக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இவ்விழா ஒரு வாரகாலம் நடத்தப்பட்டுவருகிறது.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு வன உயிரினங்களை காப்போம், இயற்கையை காப்போம் – பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுப்போம் என்பதனை வலியுறுத்தும் விதமாக வனத்துறை சார்பில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது.

மிதிவண்டி பேரணியை மாவட்ட வனஅலுவலர் கிருத்திகா, டிஆர்ஓ அருள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய இந்த மிதிவண்டி பேரணியில் கோட்ட வன அலுவலர் கிருத்திகா மற்றும் வனத்துறையினர், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர் என 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்று சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments