தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடந்த ஜனவரி 28ம்தேதிமுதல் வேட்புமனுதாக்கல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 65வார்டுகளில் போட்டியிடும் அரசியல்கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துவருகின்றனர்.
இதனிடையே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 57வது வார்டில் திமுகசார்பில் போட்டியிடும் முத்துச்செல்வம் இன்று கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக 100க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களுடன் தேர்தல் அலுவலகத்தில் குவிந்தார். 100மீட்டருக்கு மேல் கூட்டமாகவரக்கூடாது என்ற தேர்தல்ஆணையத்தின் அறிவிப்பையும் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் போலீசாரும் கண்டுக்கொள்ளவில்லை.

அதேநேரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான செல்வ பாலாஜியிடம் வேட்புமனு தாக்கல் செய்யும்போது மற்ற கட்சியினருக்கு வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் மட்டுமே உள்ளேசென்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை காற்றில்பறக்கவிட்டு 10க்கும் மேற்பட்டோருடன் உதவிதேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
முத்துச்செல்வம். உதவிதேர்தல் நடத்தும் அலுவலரின் பாரபட்சமான இச்செயலுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்ததுடன், இதுபோன்ற பாரபட்சத்துடன் செயல்படும் அதிகாரிகளால் அரசியல்கட்சியினர் மத்தியில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக, செயல்படுமா என்ற அச்சமும் தற்போதே எழுந்துள்ளது என தெரிவித்தனர்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           7
7                           
 
 
 
 
 
 
 
 

 03 February, 2022
 03 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments