திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக ஆக்க வேண்டும் என தொடர்ந்து அரசியல் கட்சியில் குரல் கொடுத்து தேர்தல் அறிக்கையில் இடம் பெற வைக்க வேண்டும் எனவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா ,பெண்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அடிப்படையில் திமுகவின் எம்.பி சல்மா ஆகிய மூன்று எம்பிக்களை திருச்சி கைவசம்

வைத்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக திருச்சியை கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார். தமிழ்நாட்டின் மத்திய பகுதியாக இருக்கும் திருச்சிக்கு நான்கு எம்பிக்கள் கிடைத்துள்ளது மிகப்பெரிய வரப்பிரசாதம். மிக முக்கியமாக திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் ஏராளமானவை உள்ளன. மிக முக்கியமாக மத்திய அரசிடம் பேசி துவாக்குடி பால்பண்ணை அணுகு சாலைக்கு விரைவில் திட்டத்தை தீட்டி மக்களின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் அரை சுற்றுவட்டச் சாலை பணிகளை முழுவதும் முடித்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும். மாநகரில் முக்கியமாக

இரண்டு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒன்று கோட்டை ரயில் சந்திப்பு அருகே உள்ள பாலம் மற்றொன்று திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த இரண்டு பாலத்தையும் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இந்த எம்பிக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது கிடைத்துள்ள நான்கு எம்பிக்களும் திமுக கூட்டணி கட்சியினரின் எம்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தொடர்ந்து மக்களின் பல ஆண்டுகால குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து புதிய வேலைவாய்ப்பு தரும் திட்டங்களை உருவாக்கி திருச்சி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாவட்டத்திற்கு நான்கு எம்பிக்கள் ஒரு சேர குரல் கொடுக்கிறார்கள் என்பதை பார்த்து மத்திய அரசு எந்தத்

திட்டத்தையும் கிடப்பில் போடமல் உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும். இவர்களின் குரல் தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தால் திருச்சியின் வளர்ச்சியை கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments