கொரோனா தொற்று வது அலையில் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இயற்கையை பேணி காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துள்ளது.
இதன் ஒருபகுதியாக திருச்சியில் சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்க மாநில தலைவர் சபரிநாதன் தலைமையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறை மீண்டும் பிற்காலத்தில் வராத வகையில் மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கினர்.
தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியை திருச்சி மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் முருகேசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments