முறையான சாலைகள் கூட இல்லாத திருச்சி நகரம் ஸ்மார்ட் சிட்டி ஆகுமா பொதுமக்கள் கேள்வி
திருச்சி தமிழ்நாட்டின் தலைசிறந்த மாவட்டங்களில் ஒன்றாக முன்னேற்ற ஸ்மார்ட்சிட்டி திட்டங்களைப் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றனர்.
எனினும் திருச்சி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும் சரியான சாலை வசதி கூட இல்லாமல் இருப்பதை நினைக்கும் பொழுது ஸ்மார்ட் சிட்டி என்று பெருமை கொள்ளும் விதத்தில் திருச்சி எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்சியை பொருத்தமட்டில் 40, 60 80அடி அகல சாலைகள் உள்ள 100 அடி சாலைகள் என்பது மிகக் குறைவாகவே காணப்படுகிறது இன்னும் பல இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யாமல் சாலைகளின் ஓரங்களில் நிறுத்துவதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மாநகர் முழுவதும் இருக்கின்றது.
தில்லை நகர், உறையூர் சத்திரம் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் குறுகலான சாலைகள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி சரியான சாலைகள் இல்லாமல் தற்போது நடந்த தேர்தலின் போது கூட புதிய சாலைகள் அமைக்காமல் சாலைகளில் மறுசீரமைப்பு பணியை செய்துவிட்டு அப்படியே விட்டு சென்றுள்ளனர்.
இன்னும் பல சாலைகள் சைக்கிளில் செல்வது கூட அசாதாரண செயலாக இருக்கும் அளவுக்கு குண்டும் குழியுமாக தான் இருக்கின்றது.
மாநகராட்சியை பொறுத்தவரை தூய்மை பணியில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.இன்னும் பல இடங்களில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரங்களில் குவியலாக கொட்டப்படுகிறது இவற்றை அப்புறப்படுத்துவதற்கான பணிகள் தினமும் செய்யாமல் நாள் கடத்தி செய்வதால் அப்பகுதியில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
மாநகராட்சி குடிநீர் தொட்டிகளை வருடத்திற்கு ஒரு முறையேனும் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் அப்படி கூட செய்யாமல் தூய்மையற்ற நீர் மக்கள் பயன்பாட்டிற்கு தருவது மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும் பொதுமக்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu