திருச்சி மாநகரம் உறையூர் அருகே உள்ள அண்ணாமலை நகரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை(கிரியாஸ்) என்கிற செயல்பட்டு வருகிறது. மாநகரின் முக்கிய பகுதிகளில் செயல்படும் அந்த கடையில் இன்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
சோனியா என்கிற பெண்ணும் அந்த கடையில் பணியாற்றி வந்துள்ளார் இந்த நிலையில் அவர் அந்த கடையின் மாடிக்கு சென்று தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார் அந்த கடையின் மேலாளர் உள்ளிட்டோ அந்த பெண்ணை கீழே இறங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்துள்ளனர்.
ஆனால் மற்றொரு ஊழியர் மேலாளர் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது லாவாகமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை காப்பாற்றியுள்ளார் ரகு என்கிற இளைஞர் துரிதமாக செயல்பட்டதனால்
அந்த இளம் பெண் காப்பாற்றப்பட்டார் காப்பாற்றிய உடன் மயக்கம் அடைந்த அவரை கடை ஊழியர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர் இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக அந்த இளம் பெண் தற்கொலைக்கு அமைந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனால் சாலை முழுவதும் ஏராளமான இருசக்கர வாகனங்களை நிறுத்தி எப்படியாவது அந்த பெண்ணை காப்பாற்றிய வேண்டுமென குரல் எழுப்பி வந்தனர்
காவல்துறையினரும் அங்கே வந்துவிட்டனர் பின்னர் சாதுரியமாக அந்த இளைஞர் அவர் முடியை பிடித்து காப்பாற்றி மற்றொரு ஊழியருடன் கீழே அழைத்து வந்து காவல் துறை ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments