திருச்சியில் நேற்று(09.11.2021) மதியம் தொடங்கிய மழை தொடர்ந்து இரவு 10 மணி வரை பெய்தது .இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.இந்நிலையில் திருச்சி கோப்பு கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மனைவி வசந்தா (65)விடியற்காலை 4 மணி அளவில் அருகிலுள்ள தென்னந்தோப்பிற்க்கு வெளி காட்டுக்கு சென்றுள்ளார் .
விடியற்காலை நேரத்தில் சென்றதால் அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காத அவர் அதனை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இவர் அப்பகுதியில் வாழைப்பழ வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கு மூன்று மகன் மூன்று மகள்கள் உள்ளனர் .ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மழைகாலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியிருந்தது. தொடர்ந்து பொதுமக்கள் மழை காலத்தில் வெளியில் வரும் மிக பாதுகாப்பாக வேண்டும் எனவும் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments