கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் மக்கள் திண்டாடி வருகின்றனர். சிலருக்கு நிதி உதவிகள், நிவாரணப் பொருட்கள் கிடைத்தாலும் கண்ணுக்கு தெரியாமல் பலர் இன்றளவும் துயரத்தில் தான் உள்ளனர். திருச்சியில்15 நாட்களாக புற்றுநோய்க்கு மாத்திரை கிடைக்காமல் அவதியுற்ற பெண், அவருக்கு உதவிக்கரம் நீட்டிய மருத்துவமனை பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இது!
திருச்சி மலைக்கோட்டை W.B ரோடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினாம்பாள். 58 வயதாகும் இவர் கடந்த ஒன்றரை வருடங்களாக உடல் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவருக்கு சென்னையில் இஎஸ்ஐ மருத்துவமனை மூலம் சிகிச்சை மற்றும் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா நோய்தொற்று காரணத்தால் போக்குவரத்து இல்லாததால் இங்கிருந்து சென்னைக்கு செல்ல முடியாத சூழ்நிலையிலும், மாத்திரைகள் முடிந்ததாலும் வலியுடன் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்து வந்துள்ளார்.
இவருடைய மகன் திருச்சி மருத்துவமனையில் மாத்திரைகளுக்காக அணுகும்போது இங்கு மாத்திரைகள் இல்லை ஏற்பாடு செய்து தருவதாகவும் ஒன்பதாயிரம் ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் செய்வதறியாமல் யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் தவித்து வந்துள்ளார். பின்பு ஊடகத்தினரின் உதவியுடன் தன் தாயாரின் நிலைமையை எடுத்துக் கூறினார்.
இந்நிலையில் திருச்சி தென்னூர் KMC மருத்துவமனை தானாக முன்வந்து அப்பெண்ணிற்கு உதவி செய்தது. KMC மருத்துவமனையின் மேலாண் இயக்குனர் மணிவண்ணன் இச்செய்தியினை அறிந்து உடனடியாக ஒரு மாதத்திற்கு தேவையான 10 ஆயிரம் மதிப்புள்ள மாத்திரைகளை KMC மருத்துவமனை அன்புச்செழியன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நேரில் சென்று வழங்கினார்கள்.
மேலும் இது சம்பந்தமாக எங்கள் மருத்துவர்களை அணுகலாம். அவர்களுக்கு உதவி புரிய தயாராக இருக்கிறோம் என்கின்றனர். கண்ணுக்குத் தெரியாமல் பலர் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாலும் அவர்களையும் கண்டறிந்து உதவிக்கரம் நீட்டி வரும் திருச்சி KMC மருத்துவமனை நிர்வாகத்திற்கு TRICHY VISION சார்பாக வாழ்த்துக்கள்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           12
12                           
 
 
 
 
 
 
 
 

 27 April, 2020
 27 April, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments