பெண்களை காயப்படுத்தும் வண்ணம் பார்ப்பதும், கமெண்ட் செய்வதும் பாலியல் துன்புறுத்தல்கள் தான்- POSH பயிற்றுநர் பிரத்யேக பேட்டி

women Hurting looks and comments are sexual harassment posh Instructor Exclusive Interview

பெண்களை காயப்படுத்தும் வண்ணம் பார்ப்பதும், கமெண்ட் செய்வதும் பாலியல் துன்புறுத்தல்கள் தான்- POSH பயிற்றுநர் பிரத்யேக பேட்டி

திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வைஃபை சரிபார்க்க வந்த நபர், மாணவி இருக்கும் அறைக்குள் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார், இதனை அடுத்து விடுதி காப்பாளரிடம் மாணவி புகாரளித்த நிலையில், விடுதிகாப்பாளர் சம்மந்தப்பட்ட மாணவியிடம் ஆடை குறித்து விமர்சித்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், என்ஐடி மாணவர்கள் விடுதியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை கண்டித்து, பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் இன்று காலை என்ஐடிக்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து விடுதி காப்பாளர் மாற்றப்பட வேண்டும் என்பது உட்பட 13 கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தபின் மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும் நிலையில் இந்த மாதிரியான சூழல்களை எதிர்கொள்வது குறித்து தன் கருத்தை பகிர்கிறார் டிவிஎஸ் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் Employee engagement & POSH Trainer விஜிலா ஜாஸ்மின் அவர்கள், 

ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து பணிபுரியும் இடங்கள், படிக்கும் இன்ஸ்டிடூஷன்ஸ் என பெண்கள் எங்கு சென்றாலும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் உள்ளது.

பாலியல் துன்புறுத்தல் என்பது தொடுதல் என்பது மட்டுமல்ல பார்வைகள், பேசுவது கமெண்ட் செய்வது என அனைத்துமே பாலியல் துன்புறுத்தல்களில் வரும். இதற்கு எதிராக நம் நாட்டில் பல சட்டங்கள் உள்ளது. பெண்கள் மட்டும் என்றில்லாமல் அனைத்து மக்களுக்குமே இந்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பணிபுரியும் இடங்கள், படிக்கும் இன்ஸ்டிடூஷன்களில் இருக்கும் பெண்களுக்கு Protection of Women from Sexual Harassment Act, 2013 என்ற சட்டத்தை பற்றியும், இதன்மூலம் எப்படி புகாரளிப்பது என்பது குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கவேண்டும். இது நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமான சட்டம் மட்டும் இல்லை, நிறுவனத்தில் உள்ளே செல்லும் வாடிக்கையாளர்கள், உறவினர்கள் என எல்லாருக்குமான சட்டம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

ரொம்ப முக்கியமாக தற்போது என்ஐடியில் நடந்தது போன்று Victim Blame செய்வது என்பது செய்யவே கூடாது, நமக்கு சாதாரணமாக தெரியும் சில வார்த்தைகள் கூட பலருக்கு கஷ்டம் கொடுக்கும் அப்படி இருக்கும் நிலையில் இந்த மாதிரியான நேரங்களில் ஆடைகள் குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் பாதிக்கப்பட்டவரை கேள்வி எழுப்புவது, அவர்களால் தான் இது நிகழ்ந்தது என blame செய்வது முற்றிலும் தவறு. யார் எந்த நிலையில் இருந்தாலும் துன்புறுத்தல் செய்பவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இதனை தவிர பாதிக்கப்பட்ட நிலையில் பெண்கள் தைரியத்துடன் தான் சார்ந்த நிறுவனங்களில் இருக்கும் அதிகாரிகளிடம்  புகாரளிக்க வேண்டும், இல்லையெனில் காவல்நிலையம் சென்று புகாரளிக்க வேண்டும். இதில் நம் அசிங்கங்கப்படவோ, வெட்கப்படவோ எதுவுமில்லை, மனதால் உடலால் பாதிக்கப்பட்ட நாம் கண்டிப்பாக பாதிக்கப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர முன்வர வேண்டும். இதற்கான விழிப்புணர்வை அரசு, பணிபுரியும் நிறுவனங்கள், பெற்றோர்கள் என அனைவரும் வழங்கிட வேண்டும் என்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய... 

https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision