உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே கிடப்பில் கிடக்கும் சாலை பணியால் பொதுமக்கள்அவதி:

உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே கிடப்பில் கிடக்கும் சாலை பணியால் பொதுமக்கள்அவதி:

திருச்சி மாவட்டம் உறையூர் வெக்காளியம்மன் கோவில் சுற்றியுள்ள பாத்திமா நகர் ,பேஷ்ஷி நகர் மற்றும் தியாகராஜ நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாலை பணிகள் செய்யப்படாமல் ஜல்லி கற்கள்  கிடைப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு சாலை சீரமைக்கும் பணி என்றுக்கூறி  ஜல்லி கற்களை கொண்டு வந்து கொட்டிச்சென்றனர்.
 அதற்கு பிறகு எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குடியிருப்பு வாசிகள்,வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.


 அதன்வழியாக செல்லும் குழந்தைகளும் பாதையில் நடக்க முடியாமல் கால் இடறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது.
 இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மனோகர் நம்மிடம் கூறியதாவது, ஒரு மாதத்திற்கு மேலாக இந்த சாலை இப்படித்தான் இருக்கின்றது யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை மேலும் இதில் எவ்வித பணிகளும் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகள் ஆகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம் என்று குற்றம் சாட்டியுள்ளார் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU