திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)யி ன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் சார்பாக உணவு கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர் பயிற்சி குறித்த பயிலரங்கம்,தந்தை பெரியார் கலையரங்கில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் க. அங்கம்மாள் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்தினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் தலைவர் முனைவர் சி.அய்யாவு கலந்து கொண்டு நோக்க உரையாற்றினார். வேலைவாய்ப்பு பயிற்சி மைய உறுப்பினர் முனைவர் ப. கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.எஸ்.எஸ் கோபி சிறப்பு உரையாற்றினார். வேலைவாய்ப்பு பயிற்சி மைய உறுப்பினர் முனைவர் அ.நோபல் ஜெபக்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக, “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் ஏற்பாடு செய்த பயிற்சியாளர் திரு கார்த்தி அவர்கள்” கலந்து கொண்டு, அவர்தம் உரையில் உணவுப் பொருட்களில் கலக்கப்படும் நச்சுப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தினார்.
உணவு கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில், கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்வின் நிறைவாக வேலை வாய்ப்பு மைய உறுப்பினர் முனைவர் க.சசி குமார் நன்றி கூறினார். இந்நிகழ்வினை ஆங்கிலத்துறை பேராசிரியர் பி.அனிதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments