ஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே! உலக ஆட்டிசம் தினம் சிறப்பு கட்டுரை

ஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே! உலக  ஆட்டிசம் தினம் சிறப்பு கட்டுரை

ஆட்டிசம் என்ற சொல் புதிதாகவும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வினோதமாகவும் பார்க்கப்பட்ட காலம் மாறி பணியிடத்தில் பள்ளியில் என பல இடங்களில் நம்முள் ஒருவராக ஆட்டிச நிலையாளர்கள் பலருடன் பழகும் வாய்ப்பை பெற்று ஆட்டிசம் என்ற சொல் தனி மதிப்பையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

 நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் சமீப அறிக்கையின்படி 68ல் ஒரு குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
 இந்த நிலையில் ஆட்டிச நிலை பற்றிய விழிப்புணர்வு நாம் ஒவ்வொருவரும் பெறுவது அவசியம் .
Autism sepctrum  disorder என்பதை சுருக்கமாக ஆட்டிசம் என்கிறோம் .ASD எனப்படும் ஆட்டிசம் உட்பட பல குறைபாடுகள் உள்ளன. ஒரு குடையின் கீழ் வரும் ஒவ்வொரு நிலையும் தனக்கென தனி இயல்புகளால் வரையறுக்கப்படுகின்றன .
ASD என்ற குடையின் கீழ் வரும் குறைபாடுகள் 
ஆட்டிசம்,
 அஸ்பெர்சர் ஸின்ட்றோம்,
 பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள், பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள் என வரையறுக்க முடியாதவை, ரெட் ஸின்ட்றோம் குழந்தைப்பருவ ஒத்திசைவின்மை குறைபாடு.
 உலகம் முழுவதும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆட்டிஸம் நிலைக்கென  மரபு சார்ந்த மற்றும் உடலியல் சார்ந்த காரணிகள் கூறப்பட்டாலும் எந்த ஒரு தனிப்பட்ட காரணியோ அதன் பங்கோ அறியப்படவில்லை.


 எனவே ஆட்டிஸம் உள்ளிட்ட பல வளர்ச்சி குறைபாடுகளுக்கும் முழுத்தீர்வு அளிக்கும் எவ்வித மருந்து அல்லது மருத்துவ முறையை கண்டறியப்படவில்லை.
 இன்று  பல தடுப்பு ஊசிகளும் மருந்துகளும் மருத்துவ முறைகளும் உலா வந்து கொண்டிருப்பதன் காரணம் அந்த நோய்களின் காரணிகள் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப் பெற்றதால்தான் .
வயிற்று வலியை எடுத்துக்கொண்டால் உறவினர் முதல் மருத்துவர் வரை என்ன சாப்பிட்டீர்கள் ? என்று கேட்பார்கள் இது காரணியை தெரிந்துகொள்ள ஒரு முயற்சியே ஆகும்.


காரணி  கண்டறியப்பட்டால் தான் அதற்கேற்ற மருத்துவ முறைகளும் மருந்துகளும் குணப்படுத்த படுகிறது.
 ஒவ்வாமையின் காரணியை கண்டறியவே ஆய்வுக்கூடங்கள் பல இயங்குகின்றன.
 ஆனால் ஆட்டிசம்  பொறுத்தவரை பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் எந்த காரணியின் பங்கும் உறுதி செய்யப்படவில்லை ஏனெனில்  ஆட்டிஸம் நோய் அல்ல ஆட்டிசம் என்பது ஒரு நிலையே ஆகும்.
ஆட்டிச நிலையின் அடையாளங்களை 18வது மாதத்தில் இருந்தே கண்டறியலாம் எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை வளர்ச்சிப் படிநிலைகள்  நன்கு கவனிப்பது அவசியம்.


 ஒதுங்கி இருப்பது ,ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது ,அதீதமான பதட்டம் அல்லது சுறுசுறுப்பு அல்லது மந்தத்தன்மையுடன் இருப்பது, தன் தேவைகளை வெளிப்படுத்த விரலை சுட்டிக்காட்டுவது, பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருப்பது ,மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது ஈடுபடாமல் இருப்பது போன்றவைஆகும்.
 நோய்களுக்கான அறிகுறிகள்.
 தென்பட்டால் தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரை அல்லது மனநல மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெறுவது நல்லது கண்டறிவது மட்டுமல்லாமல் கூடிய விரைவில் தக்க பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளிக்க  அழைத்துச் செல்வது மிக அவசியம்.
 நடைபயிற்சி ,வளர்ச்சிக்கான பயிற்சி ,கல்விக்கான பயிற்சி பேச்சுப் பயிற்சி ,இந்த பயிற்சிகள் அனைத்தின்  நோக்கம் ஆட்டிச நிலையாளர்கள் தன்னிச்சையாக தரமான வாழ்வை சந்திக்க தயார் படுத்த வேண்டும் என்பதே ஆகும் .


அதாவது அடுத்த நிலையிலான அதீத சுறுசுறுப்பு ,பேச்சு குறைபாடு கவனமின்மை பதற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் .
தற்கால சிகிச்சை முறைகள் எதுவும் ஆட்டிசம் எனப்படும் ASD  காரணிகளின் வேர்களை அடிப்படை நோக்கமாகக் கொண்டவை அல்ல எனவே எந்த மருத்துவ முறையும் மேற் கொள்வதற்கு முன்னால் நன்கு ஆராய்ந்து தகுந்த ஆலோசனைகளை பெறுவது சிறப்பு.
 அதேநேரம் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருத்தல்  வேண்டும் .
இதனை தாண்டி ஆட்டிச நிலையாளர்களின் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் மாநில அரசும், மத்திய அரசும் பல சட்டங்களையும் சலுகைகளை அறிவித்துள்ளது இது மட்டுமின்றி பல சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன அவர்களுக்கு தொழிற் கல்வியும் கற்றுத் தரப்படுகிறது.
 இன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் துவங்கி உணவகங்கள் ,நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் என பல இடங்களிலும்  ஆட்டிஸம் ஆலோசனையாளர்கள் பணிபுரிவது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81