திருச்சி சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து உலக அயோடின் தின நிகழ்ச்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது.
சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் வரவேற்றார்.  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி முதலுதவி பயிற்றுனர் சிவராமலிங்கம், ஆலோசனை குழு உறுப்பினர் இளங்கோவன், திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசர் வட்ட தலைவர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

உலக அயோடின் தினம் குறித்து பள்ளி மாணவி சுபாஷினி பேசுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் அக். 21-ம் தேதி, உலக அயோடின்  தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அயோடின் சத்து மனித உடல் ஆரோக்கியத்துக்கும், மூளை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது. அயோடின் சத்துக் குறைவினால் முன் கழுத்து வீக்கம், உடல் சோர்வு, மந்தநிலை போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். அயோடின் குறைபாட்டால் ஹைபோ தைராய்டு ஏற்படுகிறது, காரணமின்றி எடை அதிகரித்தல், மனச்சோர்வு, முடி உதிர்தல், வறண்ட சருமம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றார். அயோடின் சத்துக்கள் நிறைந்த முட்டை, இறைச்சி, கீரை, மீன், பால், வாழைப்பழம் மற்றும் சமையலுக்கு அயோடின் கலந்த உப்பை உபயோகிப்பதன் மூலம், உடலுக்குத் தேவையான அயோடின் சத்து கிடைக்கப்பெறுகிறது என்றார். நிறைவில் ஆசிரியை உமா நன்றி கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments