நரிக்குறவர் இன மக்களிடையே உலக தாய்மொழி நாள் விழா

நரிக்குறவர் இன மக்களிடையே உலக தாய்மொழி நாள் விழா

உலக தாய் மொழி முன்னிட்டு திருச்சி தேவராய நேரியில் நச்செள்ளை தமிழ்ப்பேராயம் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் தமிழ்ச் சங்கத்திலுள்ள தமிழ்த்தாய் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பேராயம் அமைப்பின் சார்பில் கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ்குமார் புகழ்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தாய்மொழியைப் போற்றுவோம் என்ற தலைப்பில் திரு.சதீஷ் குமார் ஆற்றிய உரையில்... உலகின் மூத்த மொழி தமிழ்மொழி, மூத்த இனம் தமிழினம் . தமிழர்கள் நாம் இதுவரை ஐயாயிரம் ஆண்டுகள் மூத்தது என்று கூறுகிறோம். சீனர்கள் தமிழ்மொழி ஐம்பதாயிரம் ஆண்டுகள் மூத்தது என்று குறிப்பிடுகின்றனர். ஆண்டுகள் வரையறுக்க முடியாத மிகத்தொன்மையான வாழும் மக்களின் மொழி தமிழ்மொழி.

அதன் சிறப்பை உணராத ஆட்சியாளர்களைக் கொண்ட சமூகமாக இருக்கிறோம். தமிழகத்திலுள்ள எல்லா வகையான கல்வி நிலையங்களிலும் தமிழ் பயிற்று மொழியாக வேண்டும். 22 தேசிய மொழிகளையும் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழியாக ஆக்க நடுவரணசு வழிவகை செய்ய வேண்டும். பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை பயிற்று மொழியாக தமிழ் மொழி வேண்டும் இருந்தால் மட்டுமே ஆகச்சிறந்த அறிஞர்களை துறைதோறும் உருவாக்க உருவாக முடியும். மொழி என்பது விழி மட்டுமல்ல உயிரோடும், உணர்வோடும், பண்பாட்டோடும் தொடர்புடையது. வெறும் 22,000 ஆயிரம் பேர் பேசும் வட மொழிக்கு இந்திய மக்களின் வரிப்பணத்தில் 19 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 12 கோடித் தமிழர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள்.

ஆனால் தமிழுக்கு ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் உள்ளது. ஒரே மொழி ஒரே பண்பாடு, ஒரே அடையாளம் என்பது இன அழிப்பின் அதிகார வடிவம். அவற்றை காலந்தோறும்  தொடர்ந்து எதிர்கும் நிலம், இனம் தமிழர்களே. ஆட்சியிலும், தேர்வுகளிலும், வேலைவாய்ப்புகளிலும் தமிழ் புறக்கணிக்கப் படுவதென்பது தலைமுறைகளைக் கொல்லும் கொள்ளை நோய். அவற்றை எதிர்கொண்டு தமிழர் உரிமையை தமிழ் கொண்டே நிலை நாட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. அரசுப் பள்ளிகள் உள்ளவரை தமிழ் வாழும் என்பதெல்லாம் மாறி எல்லாப் பள்ளிகளிலும் தாய் மொழிக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றார்.


கலாம் நற்பணி மன்ற சரவணன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் பிரியதர்சினி வரவேற்றார். நிகழ்வை அருண் தொகுத்து வழங்கினார். திருநங்கை சினேகா தமிழ் விதை தமிழா என்ற தலைப்பில் பேசினார்.

அதனைத் தொடர்ந்து ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தாய்மொழியைக் காப்போம் என்ற விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் கொண்டு நடத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
நச்செள்ளை அமைப்பின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி.பிரியதர்சினி  ,கலைவாணன், ரவிக்குமார், மணிகண்டன் அருண், பிரபாத் ஆகியோர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH