திருச்சியில் உலக உடல் பருமன் நாள் முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

திருச்சியில் உலக உடல் பருமன் நாள் முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

இந்திய குழந்தை மருத்துவ குழுமம் திருச்சி பிரிவினர் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தினர்.உலக அளவில் உடல் பருமன் பற்றிய பார்வை எங்கேயும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

   இதனைப் பற்றிய சரியான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் 
உடல் பருமனை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு முகாமை இந்திய குழந்தை மருத்துவ குழுமம் திருச்சி பிரிவின் சார்பாக மார்ச் 4 முதல் கிட்டதட்ட 10 இடங்களில் கடைபிடிக்கப்பட்டது.
கி.ஆ.பெ.வி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர்.வனிதா  மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏடுகளை வழங்கினார்.


 பின்னர் குழந்தைகள் நலத் துறையின் தலைவர் மருத்துவர் மைதிலி அவர்கள் விழிப்புணர்வு ஏடுகளை உள் நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும்  வழங்கினார்.
திருச்சி எஸ். ஆர். எம்  மருத்துவ கல்லூரியில் புறநோயாளிகள் பிரிவில்  குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏடுகள் வழங்கப்பட்டன.
 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் 150 முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்த விளக்க உரையும் வழங்கப்பட்டது .
திருச்சி பெல் மருத்துவமனையில் நோயாளி பிரிவுக்கு வரும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.


 எடமலைப்பட்டிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 200 மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது .
ஸ்ரீரங்கம் அரசு பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100 மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டு கையேடு வழங்கப்பட்டது திருச்சியில் உள்ள ஆறு மூத்த குழந்தைகள் மனநல மருத்துவர்களின் கிளினிக்களுக்கான மருத்துவர் கிளமெண்ட் அண்டனி கிளினிக், மருத்துவர் ராமநாதன் கிளினிக்,சுகம் கிளினிக், கிருஷ்ணா கிளினிக், மரு. சுரேஷ் செல்லையா கிளினிக் மற்றும் மருத்துவர் ராகவன் கிளினிக் ஆகிய இடங்கள் உலக உடல் பருமன் விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டு பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது உடல் பருமனை ஒழிக்க இன்றே செயல்படுவோம் என்ற மையக்கருத்துடன் சுமார் ஆயிரம் குழந்தைகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு இந்திய மருத்துவக் குழுமம் திருச்சி பிரிவின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கையேடு ஆகியவற்றை வழங்கி இந்த நிகழ்ச்சியானது நடைப்பெற்றது.இது குறித்து பேசிய திருச்சி மருத்துவ குழுமத்தின் செயலாளர் மருத்துவர்.தங்கவேல் கூறியதாவது மாதம்தோறும் ஒரு நாள் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம் இந்த மாதத்தில் உடல் பருமன். பற்றிய விழிப்புணர்வை கிட்டத்தட்ட 10 இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம் ,இந்த மருத்துவ குழுமத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், ரோட்டரி கிளப் ,திருச்சி மெட்ரோ,ஏகம் பவுண்டேஷன் ஆகியோர் எங்களோடு இணைந்து இந்த நிகழ்வை நடத்தினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I