Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

திருச்சியில் ஒன்றரை வயதில் உலக சாதனை படைத்த குழந்தை – நெகிழ்ச்சியில் பெற்றோர்கள்

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் வசிப்பவர்கள் அருண் – சௌமியா தம்பதியினர். இவர்களின் ஒரு வயது எட்டு மாதங்களே ஆன குழந்தை விதுஷா. தன்னுடைய அசாதாரன ஆற்றலால் kalam world records, india book of records-இல் இடம்பெற்று புதிய சாதனையையும் படைத்திருக்கிறார்.

இது குறித்து விதுஷாவின் தாயார் சௌமியா கூறுகையில்… குழந்தைகளின் ஆற்றலை புரிந்து கொள்வது தான் பெற்றோரின் முதல் கடமை. தங்களுடைய விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காமல் குழந்தைகளுடைய போக்கிலேயே அவர்களுக்கு பிடித்தமானது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். என் கணவர் வெளிநாட்டில் பணி புரிகிறார். என் வீட்டில் நான் மட்டுமே என் குழந்தையோடு அதிக நேரம் செலவிடும் சூழல் இருந்த பட்சத்தில் அவளுக்குப் பிடித்தமானவற்றை தெரிந்து கொள்வதற்கு இன்னும் உதவியது.

விளையாட்டு பொம்மைகளினை விட என் குழந்தை Puzzleஇல் அதிக ஆர்வம் காட்டினாள். இதனால்  தொடர்ந்து அவளுடைய வளர்ச்சிக்கு உதவும் வகையில் பயன்படுத்தலாமே என்ற முயற்சியாகவே செய்தேன். அவளின் நினைவாற்றலை ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுது எங்களுக்கு வியப்பாகவே இருந்தது. இதனை உலகறிய செய்ய வேண்டும் என்ற முயற்சியினை செய்தேன். அவளின் ஆற்றல்  உலகிற்கு புது சாதனையையும் நிகழ்தத உதவியது.

இந்த சிறுவயதிலேயே இந்தியாவின் சின்னங்கள், இந்தியாவின் தலைநகரங்கள், உடல் உறுப்புகள், ஆடைகள், பழங்கள், காய்கறிகள், பாடல்களினை இசையின் மூலம் கண்டறிதல், விலங்குகளை அதனுடைய ஓசையின் மூலம் கண்டறிதல், போன்றவற்றை செய்ததோடு மட்டுமில்லாமல் Puzzle மூலம் ஆங்கில எழுத்துக்கள், எண்கள், காய்கறிகள், பறவைகள், விலங்குகள், வாகனங்கள், பூக்கள், வடிவங்கள், மேலும் எட்டு puzzle   பொருள்களை கண்டறிந்து 13 நிமிடம் 58 விநாடிகளில் செய்து முடித்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறாள்.

கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி  புதிய சாதனையைப் படைத்தப் பொழுது குழந்தையின் வயது ஒரு ஒரு வயது 7 மாதங்களே தான். வரும் காலங்களில் இந்த சாதனையை அவருடைய நினைவாற்றல் மூலம் உலகில்  இன்னும் அவள் பல சாதனைகள் புரிவதற்கு பெற்றோர்களாக நாங்கள் துணை புரிவோம் என்கிறார்  சௌமியா.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *