உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருச்சி பொன்மலை ரயில்வே  மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருச்சி பொன்மலை ரயில்வே  மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீரை பயன்படுத்தும் வழிமுறைகளை மறந்ததால் நீரை பாதுகாக்கும் வழிமுறைகளை தேடி வருகின்றது இன்றைய தலைமுறை.

   உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருச்சி பொன்மலை ரயில்வே  மைதானத்தில் தண்ணீர் அமைப்பின் செயலர் பேராசிரியர் சதீஷ் குமார் அவர்களின் தலைமையில் தண்ணீர் சேமிப்பதற்கான முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு  செயல் உறுப்பினர்கள்  ஜீவானந்தம், சிவகாமி, சாதனா ஸ்ரீ , வெங்கடேஷ் ஆகியோரும் இவர்களோடு பள்ளி மாணவர்களும் ,கல்லூரி மாணவர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர் .


 நீர் நிலைகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பெற்றோர்கள் நடைபயணம் மேற்கொண்டனர் .
  தண்ணீர் சிக்கனம், நீர்நிலைகள் பாதுகாப்பு,  நீர் நிலைகளை மாசுபடாமல் தடுப்பது, திறந்த வெளிகளை  குப்பைத்தொட்டியாய் மாற்றாமல் தடுப்பது.


புவிப்பந்தில் நாளும் குறைந்துவரும் நிலத்தடி நீரைப் பாதுகாத்தல்,  நீர்ப் பயன்பாடு, பாதுகாப்பு பற்றிய ஐ.நா சபையின் அறிக்கைகள், உலக அளவில் நாளுக்கு நாள் வணிகமயமாகும் நீர்நிலைகள்.   நீர் வணிகத்தால் ஏற்படும் சூழலியல் சுரண்டல், இயற்கை வளம் குன்றல் , சுகாதாரமான குடிநீர் இன்மையால் நோய்ப்பரவல். உலக அளவில் எதிர்காலத்திற்கான நீரின் தேவைகள், தமிழகத்திலுள்ள நீர் நிலைகளின் நிலைமைகள், ஆறுகளில் மணல் கொள்ளையால் ஏற்படும் வறட்சி, விவசாய பாதிப்புகள். ஆறுகளை கழிவுநீர் குட்டை யாக்கி மாசுபடுத்தாது பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU