உலக பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஶ்ரீரங்கத்தில் ரூபாய் 11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மூலதன மானிய நிதி 2023-24 ன் கீழ் ரூபாய் 11.10 கோடி திட்ட மதிப்பீட்டில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நேரு கூறியதாவது….. சென்னையில் நசரத்பேட்டை தவிர மற்ற எங்கும் தண்ணீர் இல்லை. ஆவடி பகுதியில் முற்றிலுமாக சரி செய்து விட்டோம். சும்மா ஏதாச்சு கிளப்பி விடாதீங்கய்யா… என நகைச்சுவையாக பதில் அளித்தார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஐந்து பேர் நீக்கப்பட்டது குறித்து கேட்ட பொழுது, ஸ்ரீரங்கத்தில் நாங்கள் லோக்கல்ல இருக்கிறோம் எங்கள் கிட்ட போய் நாடாளுமன்ற பற்றி கேட்கிறீர்களே என்றார்.
அப்போது, உற்சாக மாக இருந்த அமைச்சர் சீக்கிரம் கடட்டம் எழும்பாவிட்டால், அய்யரை திட்டுவேன் என்று நகைச்சுவையாக கூறினார். உடனே, மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அய்யர் , அண்ணா நீங்க தான்னே வருங்கால முதல்வரே… நீங்க நெனச்சா எல்லாமே நடக்கும்ண்ணா என்றார். இதைச் சற்றும் எதிர்பாராத அமைச்சர், யோவ்… என்னைய வீட்டுக்கு போகச் சொல்லிடுவீங்க போல, என்றார் அமைச்சர்.

பஸ் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ., பழனியாண்டி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments