திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கீழ தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் சதீஷ் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு நடந்துள்ளது. நண்பர்கள் மத்தியில் சதீஷை தாமரைச்செல்வன் அடித்து பெண்கள் முன்பு அவமானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சதீஷ் தனது நண்பர் பிரபாகரன் உள்ளிட்டோரிடம் தகவல் கொடுத்து இவரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.

இன்று திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தாமரைச்செல்வனை
அரிவாளால் வெட்டிய பொழுது காவலர் குடியிருப்புக்கு உள்ளே தப்பி ஓடி வந்து முதலில் தரைதளத்தில் இருந்த வீட்டின் உள்ளே ஓடுகிறார். அந்த வீடு திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் என்பவரது வீட்டில் ஐந்து பேரும் உள்ளே புகுந்து தாமரைசெல்வனை சரமாரியாக வெட்டி விட்டு ஓடினர்.

அப்பொழுது அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இளமாறன் என்பவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நான்கு பேரை தொடர்ந்து தேடி வந்த நிலையில்
சதீஷை ஸ்ரீரங்கம் கொள்ளிடகரை
மேலூர் சாலையில் காவல்துறையினர் பிடிக்க முற்பட்ட போது ஸ்ரீரங்கம் காவல் நீலைய காவலர்கள் ஜார்ஜ் வில்லியம்,மாதவராஜ் இருவரையும் அரிவாளாள் வெட்டி தப்பியோடிய போது ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் திருவானந்தம் கால் முட்டியில் சுட்டு பிடித்துள்ளார்.சதீஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.காயமடைந்த காவலர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பிரபாகரன், நந்து (எ)நந்தகுமார்,கணேஷ் மூன்று பேரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.இன்று அதிகாலை காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடிய பொழுது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் மூன்று பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் சம்பவ இடத்தில் ஏற்கனவே பிடிக்கப்பட்ட நிலையில் மீதமிருந்த நான்கு பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments