கல்லணை சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் பாலமாகவும் உள்ளது.மேலும் காவிரி ஆறு கல்லணையில் இருந்துதான் காவிரி, கல்லணை கால்வாய், கொள்ளிடம் என நான்காக பிரிந்து செல்கிறது இந்த நிலையில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கல்லணைக்கு வந்து செல்கின்றனர்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகள் கல்லணையில்இருந்து பிரிந்து செல்லும் ஆறுகளில் இறங்கி குளிப்பதற்கு முயற்சிக்கின்றனர். அங்கு உள்ள பொதுப்பணி துறை ஊழியர்கள் ஆற்றில் இறங்கு குளிப்பது உயிருக்கு ஆபத்து என அறிவுறுத்தி வருகின்றனர்.அப்படி பொதுப்பணித்துறையினர் சுற்றுலா பயணிகளை கண்டித்தாலும் அதையும் கேட்காமல் பல சுற்றுலா பயணிகள் தண்ணீரை கண்டதும் ஆற்று தண்ணீரில் இறங்கி குளிக்கின்றனர்.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் கல்லணைக்கு அதிக அளவில் வந்திருந்தனர். அப்படி கல்லணைக்கு வந்த திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் பிரசாத் (19).இவர் திருச்சியை தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே வீதியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் சந்திரன் மகன் லோகேஷ் (22),குமரேசன் மகன் கிரி (21),லட்சுமிதாஸ் மகன் விக்கி
(21)குமரேசன் மகன் கிரி (21) லட்சுமணதாஸ் மகன் விக்கி (21)ஆகியோர் ஆகியோர் இன்று மாலை கல்லணை சுற்றி பார்க்க வந்தனர். இதில் பிரசாத் மற்றும் லோகேஷ் ஆகியோர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்து உள்ளனர்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக பிரசாத்தும் லோகேஷும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர்.
இதை சற்றும் எதிர்பாராத அவரது நண்பர்கள் கிரியும் விக்கியும் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அருகில் இருந்த கல்லணை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து பிரசாத் மற்றும் லோகேஷ் ஆகிய இருவரையும் மீட்பதற்காக தண்ணீர் குதித்து தேடியுள்ளனர் சிறிது நேர தேடலுக்கு பிறகு இருவரையும் சடலமாக மீட்டனர்.
இது குறித்து தோகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரசாத் லோகேஷ் ஆகிய இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரசாத் லோகேஷ் நண்பர்கள் ஆன கிரி, விக்கி ஆகியோரிடம் நடந்தது என்ன என விசாரணை செய்து வருகின்றனர்.
Comments