திருச்சி, தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில்
அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவு தேடுபொறிகள் உதவி கொண்டு, அதை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எவ்விதம் கற்பித்தலில் பயன்படுத்தலாம் என்பது குறித்தான FREE AI (artificial intelligence) பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பை யுனிவர்சல் டீச்சர் அகாடெமி, பாண்டிச்சேரி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சைமன் பீட்டர் பால் அவர்கள் நடத்தினார்
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) – மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்கத் திறன் ஆகும். இந்த படைப்பாக்கத் திறன் இயந்திரங்கள் மூலமும்

சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் செயற்கை நுண்ணறிவு பற்றியும் அதன் மூலம் மாணவர்கள் தங்களது பாடங்களை விரைந்து கற்க உதவும் வீடியோ உருவாக்கவும், சில வினாடிகளில் நமது பாடபுத்தகங்களில் இருந்து கேள்விகள் பதில்கள் தயாரிப்பு, பாடல் வரிகள் எழுதுதல், அந்த

பாடல் வரிகளுக்கு சில வினாடிகளில் குரலுடன் இசையுடன் பல பாடல்கள் உருவாக்குதல், ஒரு படத்தை பேச வைப்பது எப்படி? என்பன போன்று செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு தேடுபொறிகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார் மேலும் பல புதிய அம்சங்களுடன் பயிற்சியை நடத்தினார்.
இந்த பயிற்சியில்
கல்லூரி விரிவுரையாளர்கள்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்கள்,
இடைநிலை ஆசிரியர்கள்,

மாணவர்கள் என நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் சான்றிதழை மணப்பாறை வட்டார கல்வி அலுவலர் திரு.அர்ஜுன் வழங்கினார்கள்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments