குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு முன்மாதிரியான சேவை விருதுகளுக்கான கருத்துருக்கள் வரவேற்பு.
தகுதி உள்ள குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.விருதுகள் வழங்கப்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களின் வகைகள்
அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான கூர்நோக்கு இல்லம், சிறப்பு இல்லம் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள்
தகுதிகள்: இளைஞர் நீதிச் சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்) 2015 இன் கீழ் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து வருட காலம் செயல்பாட்டில் இயங்கி இருக்க வேண்டும். குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது.
விருப்பமுள்ள குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் தங்களது கருத்துருக்களை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, கலையரங்கம் வளாகம், கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி (தொலைப்பேசி எண் 0431-2413055) என்ற முகவரியில் 10 தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments