Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy News

ஜி ஸ்கொயர் நிறுவனம் திருச்சியில் 23 ஏக்கரில் உடனடியாக வீடு கட்டி குடியேற 368 வில்லா வீட்டு மனைகள் அறிமுகம் செய்யவுள்ளது.

No image available

திருச்சி மக்களிடையே கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் தனது அடுத்த திட்டத்தை அறிவித்துள்ளது. 23 ஏக்கரில் உடனடியாக வீடு கட்டி குடியேறும் விதமாக அனைத்து வசதிகளுடன் 368 வில்லா வீட்டு மனைகளுடன் கூடிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பிரீமியம் வீட்டு மனைகள் முக்கியமான இடங்களில் அமைந்துள்ளன. மேலும் இவை தடையற்ற போக்குவரத்து வசதி, சிறந்த உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் வீடு வாங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற திட்டங்களாக இது இருக்கும் என்று ஜி ஸ்கொயர் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்களுக்கான மொத்த வளர்ச்சி மதிப்பு ரூ.300 கோடியாகும்.

சென்னையில் இந்நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, திருச்சியிலும் தனது வீட்டு மனைகள் திட்டத்தை ஜி ஸ்கொயர் விரிவுபடுத்துகிறது. இப்போது இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வில்லாக்கள் திட்டங்களிலும் கால் பதித்துள்ளது. திருச்சியில் அதிகரித்து வரும் குடியிருப்பு தேவையை கருத்தில் கொண்டு இந்த விரிவாக்க நடவடிக்கை ஜி ஸ்கொயர் மேற்கொண்டுள்ளது.

இதன் மூன்று புதிய வீட்டு மனை திட்டங்களும் கொள்ளிடம் மற்றும் காவேரி ஆறுகள் உள்ளிட்ட முக்கிய பகுதியிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், திருச்சி-மதுரை பைபாஸ் மற்றும் 80 அடி திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலைக்கு அருகிலும் அமைந்துள்ளன..

புதிய பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு அருகாமையில் இருப்பதால், இதன் மதிப்பு வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்கும்.

இது குறித்து ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில்,…

மொத்தம் 368 வில்லா வீட்டு மனைகளுடன் எங்கள் திருச்சி விரிவாக்கமானது, பெரிய நகரங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்களில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை மறுவரையறை தொலைநோக்குப் பார்வையில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. பிரீமியம் செய்வதற்கான எங்கள் அம்சங்கள், சிறந்த சாலை இணைப்பு மற்றும் வெளிப்படையான செயல்முறைகள் மூலம், வாடிக்கையாளர்கள் முக்கியமான இடங்களில் நிம்மதியுடன் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ள சிறப்பானதொரு வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், திருச்சி வேகமாக வளர்ந்து வருகிறது, மேலும் எப்போதும் இல்லாத அளவுக்கு குடியிருப்பு மனைகளுக்கான தேவை என்பது இங்கு அதிகரித்துள்ளது. எங்களின் இந்தத் திட்டங்கள் அந்தத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், நீண்ட கால மதிப்புள்ள நிலையான, பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் என்றும் தெரிவித்தார்.

ஜி ஸ்கொயர் நிறுவனம் நிலம் வாங்குவதிலிருந்து வீடு கட்டி முடிப்பது வரை அனைத்து விதமான உதவிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. குடும்பங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த திட்டங்களில் திட்டத்தைப் பொறுத்து 15 முதல் 40க்கும் மேற்பட்ட உலக தரம் வாய்ந்த வசதிகள் உள்ளன.

ஓராண்டு வரை பராமரிப்பு உதவியும் வழங்கப்படுகிறது. மேலும் அனைத்துத் திட்டங்களும் சரியான சட்ட ஆவணங்கள் மற்றும் DTCP ஒப்புதல்களை பெற்றுள்ளன

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *