Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

துவரங்குறிச்சி பகுதியில் உள்ள மின்மாற்றியில் 4 லட்சம் மதிப்பிலான காப்பர் தகடுகள்திருட்டு.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நவீன எரி மேடைக்கு புதிய வணிக மின் இணைப்பு வழங்குவதற்காக கடந்தாண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி 63 KV /11 KV திறன் கொண்ட மின்கலன் பொருத்தப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டது.இந்த நிலையில் அப்பகுதியை ஆய்வு மேற்கொண்ட வயர் மேன் கணேஷ் என்பவர் மின்மாற்றி இருக்கும் இடத்திற்கு சென்ற போது மின் மாற்றி 0FF-ல் இருந்ததை கண்டு அருகில் சென்று பார்த்தபோது அதிர்ச்சி

அடைந்தார்.மின்மாற்றியில் உள்ள காப்பர் காயில் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. காயிலின் மதிப்பு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மின்மயானம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 2023 – 24 ல் சுமார் ஒரு கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் இன்னும் நவீன எரிமேடை பயன்பாட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று துவரங்குறிச்சி அடுத்த பழைய பாளையம் ஊராட்சி நாட்டார்பட்டி தகன மேடை அருகே 25 KV/11K V திறன் கொண்ட மின்மாற்றி கடந்த 2024 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது .இந்த நிலையில் அப்பகுதிக்கு மின் விநியோகம் தடைபட்டுள்ளது என தகவல்

பெறப்பட்டு மின்வாரிய ஊழியர் டேவிட் ராஜ் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது மின்மாற்றியிலிருந்து மின்சாரம் வராமல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக மின்மாற்றி அருகே சென்ற போது மின்மாற்றியில் இருந்த காயில்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது .

மின்மாற்றியில் இருந்த HV மற்றும் L v காயில்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது .இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.இதனை அடுத்து துவரங்குறிச்சி மின்வாரிய அதிகாரிகள் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு

உட்பட்ட நவீன எரிமேடை அருகே உள்ள மின்மாற்றி மற்றும் நாட்டார் பட்டி தகன மேடை அருகே உள்ள மின்மாற்றி இரண்டிலும் இருந்த காயில்களை மர்ம நபர்கள் திருடியுள்ளதாக புகார் அளித்தனர். இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வளநாடு பகுதியில் உள்ள மின்மாற்றிகளில் காயில்கள் திருடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மின்மாற்றியில் மின்சாரம் சென்று கொண்டிருந்த போதே மர்ம நபர்கள் இதுபோன்று துணிச்சலுடன் காயில்களை கழட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *