திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே வைத்து கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு மெத்தப்பட்டமின் போதைப்பொருள் விற்பனை செய்த மூவரை உறையூர் காவல் ஆய்வாளர், OCIU காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் ராமலிங்க நகர் பார்க் அருகில் வைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில்,சீ னிவாசா நகர் கனரா பேங்க் காலனியைச் சேர்ந்த பூஜித் (24), ஈரோடு மாவட்டம் டீச்சர் காலனியைச் சேர்ந்த ஆல்வின் (23), ராஜா காலனியைச் சேர்ந்த நகுல் தேவ் (21) மற்றும் திருச்சி மாநகரத்தில் இன்னும் பலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அவர்களை குறிப்பிட்டு போலீசார் கைது செய்ய உள்ளனர்.

இவர்களுக்கு தலைவனாக சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர் செயல்படுவதாக தெரிய வருகிறது. போதைப் பொருட்கள் பெங்களூரில் இருந்து வாங்கி வரப்பட்டு திருச்சி மாநகரம் முழுவதும் விற்கப்பட்டு வந்தது தெரிய வருகிறது. இந்த வழக்கில் இன்னும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. மூன்று நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மெத்தப்பட்டமின் போதைப்பொருளின் மொத்த மதிப்பு 1 லட்சம் ஆகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments