கொலை செய்ய முயற்சி 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை செய்ய முயற்சி 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி மாநகரத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு போன்ற வழக்குகளின் குற்றவாளிகள் மீது பதிவு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா அறிவுரைகள் வழங்கி உள்ளார்.அரிவாளால் தாக்கி கொலை முயற்சி

கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி பொன்மலை காவல் நிலைய எல்லையில் காதல் திருமணம் செய்ய உதவியதை தட்டி கேட்ட நபரை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

திருச்சி சார்பு நீதிமன்றத்தில் விசாரணை

இந்த வழக்கின் விசாரணையை முடித்து, மேல கல்கண்டார் கோட்டை, கணேஷ் நகர் சேர்ந்த கணேசமூர்த்தி சுப்ரமணி என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 10.09.2012 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் திருச்சி மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் நீதிபதி முரளிதரன் விசாரணை நடத்தி வந்தார்.வழக்கு விசாரணை முடிந்து குற்றவாளியான கணேசமூர்த்தி என்பவருக்கு மொத்தம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி முரளிதரன தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் கவியரசன் ஆஜரானார்.இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து, குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த பொன்மலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் தனசேகரன் மற்றும் விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் அதிகாரிகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா வெகுவாக பாரட்டினார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn