மின்வாரியத்தால் குச்சியாக காட்சியளிக்கும் 10ஆண்டு மரங்கள்- வேதனை

மின்வாரியத்தால் குச்சியாக காட்சியளிக்கும் 10ஆண்டு மரங்கள்- வேதனை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில், ஒவ்வொரு பகுதியிலும் மின்தடையை ஏற்படுத்தி மின்வாரியத்தினர் செய்கிற வேலை பெரும்பாலும் மரத்தை வெட்டுவதுதான். மாநகர் பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் ஒரு வீதியில் மரங்களை வெட்டி மலைபோல் குவித்துக் கொண்டிருக்கிறார்கள் மின்வாரிய ஊழியர்கள்.மாதந்தோறும் பல ஆயிரம் டன் பச்சை மரங்களை வெட்டி வீழ்த்தியவர்களுக்கென்று ஒரு விருது வழங்குவதாக இருந்தால், அந்த விருதைப் போட்டியின்றி பெறுவது தமிழ்நாடு மின்சார வாரியமாகத்தான் இருக்கும். 

 கிராமங்கள் முதல் நகரங்கள் வரையில் வீடு கட்ட, கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது வீட்டருகே இரண்டு மரக்கன்றுகளையாவது நட்டுப் பராமரிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், நிழல் மற்றும் நல்ல காற்றுக்காகவும் நிறைய பேர் வீட்டருகே மரங்களை நட்டுப் பராமரிக்கிறார்கள். ஆனால், 8 அடி வரையில் மட்டுமே அந்த மரங்களை வளர அனுமதிக்கிறார்கள் மின்சார வாரியத்தினர். அதற்கு மேல் வளர்ந்தால், மேலே செல்கிற மின்கம்பியில் மரக்கிளை உரசிவிடும் என்ற காரணத்தைச் சொல்லி, வெட்டி வீழ்த்துகிறார்கள். வெட்ட வெட்ட மரக்கிளை வளர்கிறது என்பதால், சில நேரங்களில் அடிமரத்தை வெட்டி வீழ்த்துவதும் நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் கஷ்டப்பட்டு வளர்த்த பத்தாண்டுகள் மரங்களும் மொட்டையாக காட்சியளிக்கிறது .சமூக ஆர்வலர்களிடம் இதுகுறித்து கேட்ட பொழுது மாநகராட்சி நிர்வாகம்,மின்வாரியம் நெடுஞ்சாலைத்துறை, இணைந்து மரங்களை வளர்க்கும் போதும், இடையூறு ஏற்படும் போது வெட்டுவதற்கும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். 10 ஆண்டுகள் வளர்த்து மரத்தை குச்சியோடு வெட்டிவிட்டு செல்வது என்ன நியாயமான கேள்வி எழுப்புகின்றனர்.

 தற்போது பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கூறி பல மரங்களை வெட்டி செல்கின்றனர். சாலைகள் மற்றும் வீடுகளின் ஓரங்களில் வைக்கப்படும் மரங்களை இவ்வாறு முழுவதுமாக வெட்டப்படுவதால் மரம் வளர்ப்பு என்ற ஆர்வமே பொதுமக்களிடம் இல்லாமல் போய்விடுகிறது. அதுமட்டுமின்றி இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 நெடுஞ்சாலை துறை மற்றும் மின் வாரியத்துறை இதற்கான யோசனையோடு செயல்பட்டால் வரும் காலத்தில் இவ்வாறு மரங்கள் அழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..


https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO