ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி நடைபெற்ற ஆட்டு சந்தைக்கு வந்த 13 பேர் கைது!

ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி நடைபெற்ற ஆட்டு சந்தைக்கு வந்த 13 பேர் கைது!

சந்தைக்கு வந்திருந்த ஆடுகள் மற்றும் வியாபாரிகளின் சத்தம் ஒரு புறமும்,
கொரோனா அச்சம் மறுபுறமும் இருக்க அப்பகுதி மக்கள் சமயபுரம் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சந்தை நடந்த இடத்திற்கு வந்த போலிசார், 5 வாகனங்களையும், 13 பேரையும், அவர்களிடமிருந்த 46 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த மதி, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், விராலிமலை அருகே இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த அழகர், மற்றும் தேனி,திருச்சி நெ.1 டோல்கேட் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. பொது முடக்க காலத்தில் யார் இந்த சந்தையினை கூட ஏற்பாடு செய்தது என்பது குறித்து சமயபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.