உலக ஜாம்பவான் அமெரிக்காவின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டெஸ்லா என்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் மற்றும் எக்ஸ் சமூக வலைத்தள நிறுவனத்தின் அதிபராகவும் திகழ்கிறார்.
இவரது டெஸ்லா நிறுவனத்தின் கார்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யவும், அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையை இந்தியாவில் 2 ஆண்டுகளில் அமைக்கவும் பேச்சு நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத்தில் ஜனவரி மாதம் நடக்கவுள்ள வைப்ரன்ட் குஜராத் குளோபல் சம்மிட் உச்சி மாநாட்டின் போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா நிறுவனத்தின் கார் தொழிற்சாலை குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் ஒன்றில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக டெஸ்லா நிறுவனம் 2 பில்லியன் டாலர் (ரூபாய் 16 ஆயிரத்து 654 கோடி) முதலீடு செய்யும் என தகவல்கள் கசிகின்றன.
Comments