ஜன.15, ஜன.26 ஆகிய இரண்டு நாட்கள் உலர் நாளாக (Dry Day) மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை ஆணையர் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், திருவள்ளுவர் தினம் (ஜன.15) மற்றும் (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும்
ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட வேண்டும். மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments