டிராக்டர் ஏற்றிக்கொன்ற வழக்கில் 2 ஆயுள் தண்டனை

டிராக்டர் ஏற்றிக்கொன்ற வழக்கில் 2 ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புள்ளம்பாடி ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது சித்தப்பா பழனிச்சாமி குடும்பத்துடன் வெங்கடாஜலபுத்தில் வசித்து வருவதாகவும், அவருக்கு தனபாப்பு என்ற மனைவியும், சத்தியமூர்த்தி என்ற மகனும் இருப்பதாகவும், அதே ஊரில் வசிக்கும் தனபாப்புவின் அண்ணன் ராமசாமி பஞ்சாயத்து தலைவராக இருக்கும் போது தேர்தல் செலவுக்காக ரூ.100000/- தனபாப்பு வெளியில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். 

இதனை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்படி ராமசாமி இறந்து விடவே அவரது மகன் ராஜகோபால் என்பவரில் தனபாப்பு மற்றும் சத்தியமூர்த்தி பணம் கேட்கும் போது இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. 2017 ஆம் வருடம் மே மாதம் 24ஆம் தேதி அதிகாலையில் சம்பவத்தன்று ராஜகோபால் என்பவர் சத்தியமூர்த்தி வீட்டிற்கு சென்று அப்போது கையில் வைத்திருந்த கனமான ஆயுதத்தால் தனபாப்பு மற்றும் சத்தியமூர்த்தி தலையில் அடித்து கொலை செய்தும் பின் அவர்களை வீட்டு வாசலில் மண் ரோட்டில் போட்டு விட்டு தனது புளு கலர் டிராக்டரை அவர்கள் மீது ஏற்றி விபத்தில் இறந்ததாக ஜோடனை செய்து விட்டு ஓடிவிட்டதாக

வாதியின் உறவினர் மூக்கன் மகன் செல்வகுமார் என்பவர் தகவல் தெரிவித்ததின் பேரில் வாதி சம்பவ இடம் சென்று பார்த்து விட்டு நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் லால்குடி இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வமுத்துக்குமார் குற்றவாளி ராஜகோபாலுக்கு இரண்டு ஆயுள் தண்டனை மற்றும் 13 ஆயிரம் அபதாரம் விதித்து தீர்ப்பளித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision