திருச்சியில் புதிய 25 தாழ்தள சொகுசு நகரப் பேருந்துகள் விரைவில் இயக்கம் – முதலமைச்சர் உத்தரவின்படி புதிய சேவை தொடக்கம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களின் நகரப்போக்குவரத்தை வசதிகரமாக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிமிடெட், திருச்சி மண்டலத்திற்கு ரூ.23.75 கோடி மதிப்பில் 25 புதிய Ultra Low Entry வகை சொகுசு தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தாழ்தளப் பேருந்துகள்,
திருச்சி முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து, திருச்சி மாநகரின் முக்கிய வழித்தடங்களில் விரைவில் இயக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 10 பேருந்துகள் சேவையில் பயணிக்கத் தயாராக உள்ளன.பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சியின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டண விவரங்கள்
கலைஞர் பேருந்து முனையம் – ஸ்ரீரங்கம் (தில்லைநகர் வழியாக): 2 பேருந்துகள் இயக்கம், கட்டணம் ₹31,கலைஞர் பேருந்து முனையம் – சத்திரம் பேருந்து நிலையம் (தில்லைநகர் வழியாக): 2 பேருந்துகள், கட்டணம் ₹25,உறையூர் வழியாக: 1 பேருந்து, ₹27,பாலக்கரை வழியாக: 1 பேருந்து, ₹23
சமயபுரம் – நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக: 4 பேருந்துகள், ₹37
துவாக்குடி வழியாக: 2 பேருந்துகள், ₹33, சத்திரம் பேருந்து நிலையம் – கே.கே.நகர் 1 பேருந்து, ₹23 விமான நிலையம் – ஸ்ரீரங்கம் (தில்லைநகர், TVS வழியாக): 1 பேருந்து, ₹34
சத்திரம் பேருந்து நிலையம் – பொன்மலைப்பட்டி (டோல்கேட் வழியாக): 1 பேருந்து, ₹23,சத்திரம் பேருந்து நிலையம் – பாரதிதாசன் பல்கலைக்கழகம் (விமான நிலையம் வழியாக): 2 பேருந்துகள், ₹31,சத்திரம் பேருந்து நிலையம் – மண்ணச்சநல்லூர் (டோல்கேட் வழியாக): 1 பேருந்து, ₹25,சத்திரம் பேருந்து நிலையம் – லால்குடி (நெ.1 டோல்கேட் வழியாக): 1 பேருந்து ₹31, துவாக்குடி – பழைய பால்பண்ணை: 2 பேருந்துகள், ₹27
பெட்டவாய்த்தலை – ஜீயபுரம்: 2 பேருந்துகள், ₹31,மத்திய பேருந்து நிலையம் – விராலிமலை (பஞ்சப்பூர் வழியாக): 2 பேருந்துகள், ₹35
இயக்கப்பட உள்ளன குறைந்தபட்ச பயணக்கட்டணம் ரூ.11 முதல் அதிகபட்சமாக ரூ.40 வரை வசூலிக்கப்பட உள்ளன.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments