திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூர் என்ற இடத்தில் ஹோட்டல் கே.கே.ஆர் என்ற உணவகத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 26 கிலோ கைப்பற்றபட்டன.

மேல்நடவடிக்கைகாக மூன்று குற்றவாளிகளையும், புகையிலை பொருட்களையும் சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அந்த உணவகம் சீல் செய்யபட்டது. மேலும் நாண்கு சட்ட பூர்வ உணவு மாதிரி எடுக்கபட்டது.

இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, அன்புச்செல்வன், பொன்ராஜ், கந்தவேல் மற்றும் மகாதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments