காணாமல் போன 26 குழந்தைகள் மூன்று நாட்களில் மீட்பு

காணாமல் போன 26 குழந்தைகள் மூன்று நாட்களில் மீட்பு

தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் உத்தரவின் பேரில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் மேற்பார்வையில், திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை) உள்ள குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, கூடுதல் காவல் கண்கானிப்பாளர் மற்றும் ஆய்வாளர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கடந்த (07.06.2023) முதல் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இத்தேடுதல் வேட்டையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 26 காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு (ஆண் குழந்தைகள் 4 மற்றும் பெண் குழந்தைகள் -22) அவர்களின் பெற்றோர்களிடம் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (புதுக்கோட்டை 3, கரூர் 1, பெரம்பலூர் 4, அரியலூர் 2, தஞ்சாவூர் 8, திருவாரூர் 3, நாகபட்டினம் 3, மயிலாடுதுறை 2).

மேலும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, கூடுதல் காவல் கண்கானிப்பாளர் மற்றும் ஆய்வாளர்களின் தலைமையிலான தனிப்படைகள் மூலம் காணாமல் போன குழந்தைகளை மீட்கும் பணி தெடர்ந்து நடைப்பெறும் என்று மத்திய மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn