திருச்சி ரோட்டரி சங்கங்களின் சார்பாக 28 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைக்கு நன்கொடை!

திருச்சி ரோட்டரி சங்கங்களின் சார்பாக 28 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைக்கு நன்கொடை!

திருச்சியிலுள்ள ரோட்டரி சங்கங்கள் சார்பாக 28 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வு திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் நடைபெற்றது.

கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் பலவிதங்களில் முயன்று வருகிறது. அதன் ஒரு அங்கமாக திகழும் ரோட்டரி மாவட்டம்  3000 அதிலுள்ள பல சங்கங்கள் மூலம் 8 வருவாய் மாவட்டங்களில் மக்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு மருத்துவ உதவிகள்,முக்கிய உபகரணங்கள் ரோட்டரி அறக்கட்டளை மூலம் நன்கொடையாக மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளுக்கு
அளித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மிக முக்கிய அனலைசர் கருவியினை திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனைக்கும் மற்றும் ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான அல்ட்ரா சவுண்ட் கலர் டாப்லர், இரண்டு டிஜிட்டல் இதயப் பரிசோதனை வரை படக்கருவி ஏழு ஆகிய 9 உபகரணங்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி, தொட்டியம், துவரங்குறிச்சி, துறையூர், ஓமாந்தூர், மண்ணச்சநல்லூர், மணப்பாறை தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கினர்.

இதில் திருச்சியில் உள்ள டைமண்ட் சிட்டி ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம்,சோழா ரோட்டரி சங்கம் என்ற மூன்று சங்கங்களும் இலங்கை யாழ்ப்பாணம் ரோட்டரி சங்கமும் இணைந்து இவ்விழாவை நிறைவேற்றினர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டு ரோட்டரி நன்கொடையை மருத்துவ உபகரணங்களை திருச்சி மாவட்ட மருத்துவமனையில் தலைவர் கே.வனிதா அவர்களிடம், திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி அவர்களிடம் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்சியை திருச்சி டைமன்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் கோவிந்தராஜ், சோழாரோட்டரி சங்க தலைவர் அமலசந்திரன், டைமன்ட்சிட்டியின் முன்னாள் தலைவர் முகமது தாஜூதீன் மற்றும் செயலர்கள் கார்த்திகேயன், பாக்கியராஜ் திட்டத்தின் குழு உறுப்பினர் மற்றும் சங்கங்களின் சார்பாக பலர் கலந்து கொண்டனர்.