திருச்சி மாநகர சாலைகளில் காலை 30 கிலோமீட்டர், இரவு 40 கிலோமீட்டர் - திருச்சி மாநகர காவல்துறையினர் நடைமுறைப்படுத்தி விழிப்புணர்வு!
திருச்சிராப்பள்ளி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களினால் ஏற்படும் சாலை விபத்துகளை தவிர்க்கும் விதமாக மோட்டார் வாகனங்களின் வேகத்தை சீராகிவிடும் பொருட்டு சாலைகளில் வேகக்கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நிர்ணயிக்கப்பட்ட வேகம் 30 கிமீ/மணி என்றும், இரவு 10 மணி முதல் பகல் 7 மணி வரை 40 கிமீ/மணி என்றும் ஏற்கனவே அமலில் உள்ள அறிக்கையை நடைமுறைப்படுத்துவது மற்றும் சாலை விபத்துக்களை தவிர்ப்பது சம்பந்தமான விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இன்று துவக்கி வைத்தார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் குற்றம் மற்றும் போக்குவரத்து வேதரத்தினம், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் சாலையான பால் பண்ணையில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP