முசிறி அடுத்த தொட்டியம் தாலுக்கா காட்டு புத்தூர் நத்தமேடு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் உள்ள அக்ரஹாரம் பகுதியில் கசடு நீர் கழிவு வாய்க்கால் கட்டுவதற்கு பள்ளம் தோன்றியபோது சுமார் 12 முழு சிலைகள் சிலையின் உதிரி பாகங்கள் 22 பஞ்சலோக சிலைகள் கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த
தொட்டியம் தாலுக்கா காட்டுப்புத்தூர் நத்தமேடு பழைய அக்ரஹாரம் பகுதியில் கசடு கழிவுநீர் வெளியேற்றுவதற்காக கட்டமைப்பு கட்டுவதற்கான பள்ளம் தோண்டப்பட்டது
அப்போது சிவன் பார்வதி நடராஜர் பெருமாள் விஷ்ணு ஆஞ்சநேயர் விநாயகர் உள்ளிட்ட பெரிதுமான பஞ்சலோக சிலைகள் கிடைக்கப்பெற்றது
இதை எடுத்து பொதுமக்கள் அதனை பாதுகாப்பாக எடுத்து அருகில் இருந்த கீட்டு கொட்டகையில் வைத்துள்ளனர்.
இது குறித்து தொட்டியம் தாசில்தார் செல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் சிலைகளை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார்
கிடைக்கப்பெற்ற சிலைகள் முசிறி சப் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் பாதுகாக்கப்படும் என தெரிய வருகிறது.
இந்நிகழ்வில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் சுதா சிவ செல்வராஜ் வருவாய் ஆய்வாளர் ராம்குமார் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ண வேணி மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments