ஸ்ரீரங்கம் கோவில் புரட்டாசி சனிக்கிழமைகளில் 3600 பக்தர்கள் அனுமதி -காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு

ஸ்ரீரங்கம் கோவில் புரட்டாசி சனிக்கிழமைகளில்  3600 பக்தர்கள்  அனுமதி -காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு

ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் வருவதையொட்டி 4 சனிக்கிழமைகளில் 2 மணி நேரத்திற்கும் 600 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சனிக்கிழமைகளில் 3600 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

இவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை அடையாள அட்டையுடன் காண்பித்து குறிப்பிட்ட பதிவு செய்த நேரத்தில் அரை மணி நேரத்திற்கு முன்னதாக வந்து தரிசனம் செய்யலாம்.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement

சனிக்கிழமைகளில் அனுமதிக்கப்படும் 3600 பேரில் 1800 பேர் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 1,800 பேர் கட்டண தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வெளியூர்களிலிருந்து வருபவர்கள் சித்திரை வீதியில் மட்டுமே கார்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பேருந்து மற்றும் வேன்களில் வருபவர்கள் மூலைத்தோப்பு பகுதியில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு வரவேண்டும் எனவும், கோவிட் தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எனவும் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement