நிற்காமல் சென்ற 4 தனியார் பேருந்துகளுக்கு அபராதம்
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெல் நிறுவனம் அருகே கணேசா ரவுண்டானா பேருந்து நிறுத்தம் உள்ளது. அண்மையில் தொடர் விபத்துகளை தவிர்க்க அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சில நகர்ப்புற பேருந்துகள் பாலத்தின் கீழே சென்று கணேஷா ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்காமல் பாலத்தின் மேலே செல்வதாக புகார்கள் எழுந்தன. இதனால் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ -- மாணவிகளும், பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து திருவெறும்பூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இன்று காலை திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தார்.
அப்போது கணேச ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற நான்கு தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து பேருந்து ஓட்டுனர்கள் இதனை மீறும் பட்சத்தில் பேருந்துக்கான பர்மிட்டை ரத்து செய்வதாக அவர் எச்சரித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision