புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல்
திருச்சிராப்பள்ளி No.1 டோல்கேட் பகுதியில் உள்ள மதுரா டீ ஸ்டால், நத்தர்ஸா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஜமால் ஸ்டோர், சறுக்குபாறை பகுதியில் உள்ள சரவணா ஸ்டோர் மற்றும் இ புதூரில் உள்ள அன்பு பீடா ஸ்டால் ஆகிய நான்கு கடைகளிலும் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததால்
உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் R.லால்வேனா அவசர தடையாணை உத்தரவின் படியும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் M.பிரதீப்குமார் அறிவுறுத்தலின் படியும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் அந்த நான்கு கடைகளும் சீல் செய்யப்பட்டது.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில்.... திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதோ அல்லது பதுக்கி வைப்பதோ போன்ற தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். மேலும் அந்த நபர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் என்று கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision