திருச்சி மாநகரில் Spa மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்கள் என்ற பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக ஏதும் நடத்தப்படுகிறதா என திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 15க்கும் மேற்பட்டவரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். திருச்சி மாநகரில் கன்டோன்மென்ட் ,கே.கே. நகர், தில்லைநகர் ஆகிய இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த 5 பேரும் சட்டவிரோதமாக பாலியல் தொழில் செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP



Comments