மாநில நெடுஞ்சாலையை கடந்த 5 அடி நீளம் மலைப் பாம்பு - பொதுமக்கள் அச்சம்!!

மாநில நெடுஞ்சாலையை கடந்த 5 அடி நீளம் மலைப் பாம்பு - பொதுமக்கள் அச்சம்!!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது பச்சைமலை எப்பொழுதும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் செழிப்பான பகுதியாகும் மழையின் அடிவாரப் பகுதியில் அருகே நாகலாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. மேலும் கிராமத்தின் மேற்கு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான அடர்ந்த காடுகள் அமைந்துள்ளது.

நேற்று இரவு அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்த இருந்து. அப்போது துறையூர் - சென்னை மாநில நெடுஞ் சாலையில் 5 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு கடந்ததால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைத்தனர். மலைப்பாம்பு சாலையை கடப்பதற்காக சுமார் 30 நிமிடம் எடுத்துக் கொண்டது.

மலைப்பாம்பு சாலையை முழுவதும் கடந்த பின்னரே இரு புறமும் வாகனங்கள் செல்ல தொடங்கினார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision