53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிக்கு சிறந்த  பாதுகாப்பு அதிகாரிக்கான விருது 

53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிக்கு சிறந்த  பாதுகாப்பு அதிகாரிக்கான விருது 

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை  பாதுகாப்பு அதிகாரியான கார்த்திகேஷ் காசிநாத்துக்கு  நாட்டிலுள்ள படைக்கலன் தொழிற்சாலைகளில் சிறந்த பாதுகாப்பு அதிகாரிக்கான விருது   வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும் 41 படைக்கலத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிறந்து விளங்கும் அதிகாரி ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் படைக்கலத் தொழிற்சாலை  நிர்வாகம் சார்பில் 'சிறந்த பாதுகாப்பு அதிகாரி' விருது வழங்கப்படுவது வழக்கம். 

அதன்படி நடப்பாண்டின் சிறந்த பாதுகாப்பு அதிகாரிக்கான விருது திருச்சி படைக்கல (துப்பாக்கி) தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஷ் காசிநாத்-க்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் புதுமைகளைப் புகுத்தியமைக்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. 

1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை உள்ள காலகட்டத்தில் முதல் முறையாக திருச்சி துப்பாக்கி  தொழிற்சாலையில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் நேற்று நடைபெற்ற படைக்கல தின விழாவில், தொழிற்சாலையின் பொதுமேலாளர் சஞ்சய் திவேதியிடமிருந்து கார்த்திகேஷ் காசிநாத் இவ்விருதைப் பெற்றுக் கொண்டார். 

கார்த்திகேயன் காசிநாதன் பற்றி..
இவ்விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கார்த்திகேஷ் காசிநாத்,கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர். இவரது 20 ஆண்டு பணிக்காலத்தில் 4-முறை ராணுவத்தின் மெச்சத்தக்க பணிக்கான விருது பெற்றுள்ளார். 
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய ராணுவத்தின் சார்பில் லெபனான் மற்றும் சிரியா நாடுகளில் பணிபுரிந்துள்ளார்.2009-ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்கான துணிச்சல்மிகு விருது பெற்றவர். மேலும், கருப்பு பூனைப்படை பிரிவிலும் பணியாற்றியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU