தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக பதவி வகிக்கும் திருச்சி புத்தூர் ஆறுமுகம் மகன் திலீப் (24). இவர் வீட்டில் இருந்து வெள்ளை கலர் காரில் லால்குடி அருகே எசனைக்கோரை கிராமத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அகிலாண்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் அவரது கார் மீது, 7 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி தப்பியோடி விட்டனர்.
இது குறித்து திலீப் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் நாட்டு வெடி குண்டு வீசியது தொடர்பாக அகிலாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோபால், மதன், நந்தகுமார், வினோத்குமார், ரவி, சுரேஷ் ஆகிய 7 பேரை சமயபுரம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பட்டபகலில் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO







Comments